பொதுவாக சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தான் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகரின் படங்களின் அப்டேட் கேட்டு பதிவு செய்வார்கள் என்பதும், இது ஒரு கட்டத்தில் எல்லை மீறியது என்பதையும் பார்த்து வந்தோம்.
இந்த நிலையில், தற்போது திடீரென பிக் பாஸ் ரைசாவின் "ஆர்மிகள்" என்ற கூறப்படும் ரசிகர்கள், "எங்கள் தலைவியின் அடுத்த பட அப்டேட் வேண்டும்" என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா, ஜி.வி. பிரகாஷுடன் "காதலிக்க யாருமில்லை" என்ற படத்தில் நடிக்க சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தமானார். இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்கி வந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு இந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஜி.வி. பிரகாஷ் அதற்குப் பிறகு ஒப்பந்தமான படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆன நிலையில், இந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை என்பதால், "இந்த படத்தின் அப்டேட் வேண்டும், எங்கள் தலைவி ரைசா படத்தை உடனே ரிலீஸ் செய்ய வேண்டும்" என திடீரென ரைசாவின் ஆர்மி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.