விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல ஜோடிகள் காதலிப்பதாக கூறப்பட்டாலும் திருமணம் வரை எந்த காதலும் இதுவரை வந்ததில்லை. இந்த நிலையில் முதன் முதலாக அமீர் மற்றும் பாவனி காதலர்களாக மாறி விரைவில் தம்பதிகளாக உள்ளனர். ஆம் அவர்களுடைய திருமண நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலாகிய அமீர் – பாவனி ஜோடி, தற்போது திருமண முடிவை அறிவித்து ரசிகர்களை மகிழ்வில் ஆழ்த்தியுள்ளனர். பிக் பாஸ் சீசன் 5-ல் பாவனி போட்டியாளராக இருந்தபோது, வைல்ட்கார்டாக வந்த அமீர் தனது காதலை பாவனியிடம் வெளிப்படுத்தினார். நிகழ்ச்சி முடிந்த பின்னும் அவர்களின் உறவு தொடர்ந்து வலுப்பெற்று வந்தது.
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களாகிய பிறகு, துணிவு திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அவர்களது நடிப்பும், உறவின் இயல்பும் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. பாவனி தமிழ் சீரியல்களில் நடிகையாக விளங்க, அமீர் திறமையான நடனக் கலைஞராக தன்னை நிறுவிக்கொண்டுள்ளார்.
இருவரும் பல ஆண்டுகளாக காதலர்களாக இருந்து, ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே ஏப்ரல் 20ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து, சமூக வலைதளங்களில் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை மழையாக பொழிந்து வருகின்றனர்.
திரை வாழ்க்கையிலேயே அல்லாமல் நிஜ வாழ்விலும் இணையும் இந்த ஜோடிக்கு இனிய வாழ்த்து!