நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!
பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானார். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது.
இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார்.
அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நடித்து வரும் ரைசா தற்போது தன் தோழியின் திருமணத்தில் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.