அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் வருகையைக் கண்காணிக்க பறக்கும் படையை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்பட்ட நிலையில் ப்ரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் வீராகங்கணை பிரியாவுக்கு மருத்துவம் பார்தத மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால்ராம் சங்கர் ஆகிய இருவரும்தான் பிரியாவுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் என்றும் இந்த இருவரும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனை மற்றும் அங்கு பணியாற்றும் மருத்துவர்களின் வருகையைக் கண்காணிக்க பறக்கும் படையை உயர் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், பறக்கும் படைகள் முறையாகச் செயல்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டுமென்று மருத்துவத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.