குளப்பாக்கம் ஏரியோ, தாழ்வான பகுதியல்ல. திறந்தவெளியும், ஏராளமான நீர் நிலைகளும் உள்ள பகுதி. அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசையே மழை நீர், கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் 47 ஆண்டுகளில் இல்லாத அதிகனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தமித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
சென்னையில் காரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பு படை வீரர்கள், போலீஸார் படகுகள் மூலம் பத்திரமீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசையே மழைநீர் ,கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவது அல்லது மருத்துவ எமர்ஜென்சியில் இருப்பது போன்றவை ஏற்பட்டு மரணத்தைக் கொண்டு வருகிறது. என்னால் முடிந்தததைக் கொண்டு மக்களுக்கு தேவையான உதவியை செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.