Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#JigarthandaXX-"நன்றிகள் கோடி, தலைவரே"- சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிய சந்தோஷ் நாராயணன்

Advertiesment
rajini- santhosh narayanan
, புதன், 15 நவம்பர் 2023 (15:05 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்து ரஜினிகாந்த நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில்,  ‘’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்ஜே சூர்யா இந்நாளின் திரை உலக நடிகைவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார். திருவோட கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டுக்குரியது.  சுப்பராயன் சண்டை காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமான இசையமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரோடி தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். ’’ என்று  தெரிவித்தார்.

இந்தக் கடிதத்தைப் பார்த்து ஜிகர்தண்டா 2 படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்த நிலையில்  நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜும் ரஜினிகாந்திற்கு நன்றி கூறினர்.

இதையடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

இந்த நிலையில் இன்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்  சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
’’எல்லோரும் வியந்து நோக்கும் ஒருவரிடம் இருந்து மனமார்ந்த பாராட்டுப் பெறுவது என்பது கிடைத்தற்கரிய பேறு. எமது அருமைத் 'தலைவர்',  சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இன்று நாம் அப்பேற்றைப் பெற்று அகமகிழ்ந்து, உளம் நெகிழ்ந்து நிற்கிறோம். இப்பாராட்டு எம்மை மேன்மேலும் கடினமாக உழைக்கவும் இன்னும் சிறந்த படைப்புகளை உருவாக்கவும் உந்துதலாகவும் உறுதுணையாகவும் நிற்கின்றது.
 
சொல்லப் போதுமான வார்த்தைகள் இல்லை, எனினும் சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொல்கிறோம், "நன்றிகள் கோடி, தலைவரே" என்று தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி, காலா ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!