Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாற்றில் நடிக்கப்போகும் நடிகை இவர்தான்!

மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாற்றில் நடிக்கப்போகும் நடிகை இவர்தான்!
, ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (10:02 IST)
பளு தூக்கும் வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் பயோபிக்கில் நடிக்க ரகுல் பிரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய சினிமாவிலேயே இப்போது பயோபிக் படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றன. அரசியல்வாதிகள், பல்வேறு துறை சாதனையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரின் பயோபிக்குகளும் உருவாகி வருகின்றன. அந்த வகையில் பளுதூக்கும் வீராங்கனையான மல்லேஸ்வரியின் பயோபிக்கும் உருவாக உள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, இந்தியாவுக்காக பெண்கள் பளு தூக்குதல் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர்.

இதற்காக நடிகைகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் இந்த கதாபத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளும் மறுத்துள்ளனர். அதற்கான காரணம் பளு தூக்கு வீராங்கனை போல உடலை மாற்ற பல மாதங்கள் தேவைப்படும். அதனால் பல படங்களின் வாய்ப்பை இழக்க நேரிடும் என சொல்கிறார்களாம். இந்நிலையில் இப்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரகுல் ப்ரீத் சிங் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து உடலளவில் படத்துக்காக தயாராகும் பணிகளில் ரகுல் ப்ரீத் சிங் இறங்கியுள்ளார். இந்த படத்துக்காக அவர் உடல் எடையை ஏற்ற இருப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கை மாறுகிறது ’அருவா’ திரைப்படம்: சூர்யாவுக்கு பதில் அருண்விஜய்?