ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘காலபைரவா’

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (14:55 IST)
ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ‘காலபைரவா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 2’ (முனி 4) படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா என இரண்டு ஹீரோயின்கள்  நடிக்கின்றனர். மேலும், கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்  இந்தப் படத்திற்கு, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
 
‘காஞ்சனா 3’ படத்தைத் தொடர்ந்து, ‘காலபைரவா’ என்ற படத்தை இயக்கி, நடிக்கப் போகிறார் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தை, தன்னுடைய ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். ‘காஞ்சனா 3’ வெளியான பிறகு ‘காலபைரவா’ ரிலீஸாகும். மேலும் இரண்டு கதைகளைக் கேட்டு ஓகே செய்து  வைத்திருக்கும் ராகவா லாரன்ஸ், அதுபற்றி மார்ச் மாதம் அறிவிக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments