Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை மாநாட்டில் ரஜினி கட்சியின் கொடி, சின்னம் அறிமுகம்; ராகவா லாரன்ஸ் தகவல்

மதுரை மாநாட்டில் ரஜினி கட்சியின் கொடி, சின்னம் அறிமுகம்; ராகவா லாரன்ஸ் தகவல்
, திங்கள், 8 ஜனவரி 2018 (13:59 IST)
ரஜினிகாந்த் அரசியல் பயணத்தில் முதலாவதாக மதுரையில் மாநாடு நடத்தப்படுவதாகவும், அதில் கட்சியின் பெயர், கொடி குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.
ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மதுரையில் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பாராட்டு  விழா மற்றும் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா அழகர்  கோவிலில் நேற்று நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. மேலும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்  ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டனர். மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ராகவா லாரன்ஸ் வழங்கினார்.
 
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் 12 வயதில் இருந்து ரஜினியின் தீவிர ரசிகனாக உள்ளேன். ரஜினிகாந்த் தனது ஆன்மிக அரசியல் அறிவிப்பு அனைத்து, சாதி, மதத்தை ஒருங்கிணைப்பதுதான் இந்த ஆன்மீக அரசியல்.  அதை தவறாக புரிந்து கொண்டு அதை விமர்சனம் செய்கிறார்கள். மதுரை மண்ணில் இருந்து தனது அரசியல் பிரவேசத்தை  ரஜினி தொடங்குவார் என்றும், முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது கட்சியின் பெயர், கொடி,  சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்படும். அப்போது கட்சியின் கொள்கைகள் குறித்த அறிவிப்பும் இந்த மாநாட்டில்  வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்ற ஆசை இல்லை. இந்த மாநாடு விரைவில் நடைபெறும் என்றும், ரஜினிகாந்துக்கு காவலனாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாய் பல்லவியுடன் மோதும் நிக்கி கல்ரானி