சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் முதல் நாளில் அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் 31ஆம் தேதி தெரிவிப்பதாக கூறினார். அவர் குறிப்பிட்ட 31ஆம் தேதிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும், பிரபல நடிகர், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், ரஜினி குறித்து ஒரு பாடலை தயாரித்துள்ளார். 'வா தலைவா போருக்கு வா ' என்று தொடங்கும் இந்த மாஸ் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.
 
									
										
			        							
								
																	இந்த தகவலை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களிலே #VaaThalaivaPoarukuVaa என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. ரஜினி ரசிகர்களும், ராகவா லாரன்ஸ் ரசிகர்களும் மிக அதிக அளவில் இந்த ஹேஷ்டேக்கை ஷேர் செய்து வருகின்றனர்.