Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூசணிக்காய் உடைக்கப்பட்ட ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படம்!

பூசணிக்காய் உடைக்கப்பட்ட ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படம்!
, திங்கள், 6 மார்ச் 2023 (15:03 IST)
நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் முதலில் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து சென்னை மற்றும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு சில கட்டங்களாக நடந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் இப்போது கடைசி கட்ட காட்சிகள் சென்னை பெரும்பாக்கத்தில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது மொத்த ஷூட்டும் நிறைவடைந்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஷூட் நிறைவடைந்துள்ள நிலையில் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரதிராஜா நடிக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’- முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!