Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாவில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த தமன்னா.. குவியும் வாழ்த்துகள்

சினிமாவில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த தமன்னா.. குவியும் வாழ்த்துகள்
, திங்கள், 6 மார்ச் 2023 (10:07 IST)
தமிழ் சினிமாவில் ரவிகிருஷ்ணா நடித்த கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு  ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலும் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இப்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துவரும் தமன்னா, சினிமாவில் அறிமுகம் ஆகி 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து ரசிகர்களும், சினிமா உலகினரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன்… இயக்குனர் முருகதாஸின் மெஹா பட்ஜெட் திட்டம்!