Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 மொழிகளில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’: அதிகாரபூர்வ அறிவிப்பு!

4 மொழிகளில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’: அதிகாரபூர்வ அறிவிப்பு!
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (07:42 IST)
4 மொழிகளில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’: அதிகாரபூர்வ அறிவிப்பு!
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ருத்ரன் என்ற திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ருத்ரன் படத்தை தயாரித்து வரும் கதிரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
எங்கள் நிறுவனத்தின் வெற்றி படைப்புகளான பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா, டைரி பட வரிசையில் அடுத்து வருவது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ருத்ரன்  திரைப்படம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 
காஞ்சனா திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படம் ருத்ரன் என்பதால் ராகவா லாரன்ஸ் அவர்களின் ரசிகர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை முழு திருப்தி படுத்தும் விதமாக படத்தின் நிறைவு பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
ருத்ரன்  திரைப்படம் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் தேவைப்படுவதால் ராகவா லாரன்ஸ் நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட ’காஞ்சனா’ படம் வெளியான ஏப்ரல் மாதத்தில் அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ருத்ரன் திரைப்படம் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இறைவன் அருளுடன் ரசிகர்கள் மக்கள் ஊடகங்கள் ஆதரவுடன் ஏப்ரல் மாதத்தில் வெற்றி வாகை சூட வாழ்த்துமாறு வேண்டிக்கொள்கிறேன் என தயாரிப்பாளர் கதிரேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம் - தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்