Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு உதவி செய்யும் ராகவா லாரன்ஸ்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (17:15 IST)
தமிழ் திரையுலகினர்களுக்கு மட்டுமின்றி தமிழ் மக்களுக்கும் ஏராளமான உதவியை செய்து வருபவர் ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. குறிப்பாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நிவாரண நிதியாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலமான தீப்பெட்டி கணேசன் குடும்பத்தினருக்கும் உதவி செய்வதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அவரது குடும்பம் வறுமையில் வாடிய போது அவரது குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்து வந்த ராகவா லாரன்ஸ் அந்த உதவி தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டேன். இனிவரும் காலத்திலும் என்னால் இயன்ற அளவு உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐயாம் சாரி ஐய்யப்பா… அறிவு புகட்டி அனுப்பப்பா… இசைவாணி பாடலை விமர்சித்த எம் எஸ் பாஸ்கர்!

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

வெளிநாடுகளில் வசூல் சாதனைப் படைத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’… வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் குறித்து ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments