Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ருத்ரன் முதல் கட்ட படப்பிடிப்பு… ஹேப்பியான லாரன்ஸ்!

ருத்ரன் முதல் கட்ட படப்பிடிப்பு…  ஹேப்பியான லாரன்ஸ்!
, சனி, 13 மார்ச் 2021 (08:30 IST)
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அதைப் பார்த்த லாரன்ஸ் திருப்தியடைந்துள்ளாராம்.

நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இப்போது படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் எடுத்தக் காட்சிகளை படக்குழுவினர் போட்டுப் பார்த்துள்ளனராம். காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதால் லாரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனராம். மேலும் ஒரு இயக்குனராக கதிரேசன் தன்னை நிருபித்து உள்ளதாகவும் பாராட்டி வருகின்றனராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சின்னத்தல’யுடன் புகைப்படம் எடுத்து கொண்ட ஷிவானி, ஷிவாங்கி!