Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

Siva
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (20:27 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘கபாலி’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே, மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகஉள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது, விஜய் சேதுபதி நடிக்க உள்ள பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்துக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
முன்னதாக, இதே படத்தின் ஹீரோயினாக ‘காதல் தேசம்’ புகழ் தபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், புதிய தகவலின்படி, ராதிகா ஆப்தேவுடன் பூரி ஜெகன்நாத் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும், இவர் படத்தில் இடம்பெறும் விஷயம் உறுதியாகி விட்டதாகவும் அறியப்படுகிறது.
 
தன்னுடைய படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் ராதிகா ஆப்தே, இந்த படத்திலும் வித்தியாசமான ஒரு ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழ் சினிமாவில் ‘தோனி’ படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா, அதன் பின்னர் ‘ஆல் இன் ஆல் அழகர் ராஜா’, ‘வெற்றிச்செல்வன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், 2016-ல் வெளியான ‘கபாலி’யில் குமுதவல்லி என்ற கதாபாத்திரம் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments