Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

Siva
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (18:20 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான குக்கிங் காமெடி ஷோ ‘குக் வித் கோமாளி’ தற்போது அதன் ஆறாவது சீசன் தொடங்குவதற்கான தயாரிப்புகளில் உள்ளது. ஐந்து வெற்றிகரமான சீசன்களை முடித்த பிறகு, புதிய சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், சீசன் 6-இன் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த ப்ரமோ வீடியோ ரசிகர்களில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய சீசனில், ஏற்கனவே கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, சரத் மற்றும் ராமர் மீண்டும் பங்கேற்க இருக்கிறார்கள் என்பதும் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த சீசன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்த புதிய சீசனில் மீதியுள்ள கோமாளிகள் யார்? புதிய போட்டியாளர்கள் யார்? என்பதற்கான ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளது. விஜய் டிவி விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிகழ்ச்சியின் முதல் 4 சீசனில் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருந்தனர். ஆனால் ஐந்தாவது சீசனில், வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து விலகி, அவரது இடத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்தார்.
 
மேலும் 5வது சீசனில் முக்கியமாக போட்டியாளர் பிரியங்கா மற்றும் தொகுப்பாளினி மணிமேகலை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்