பலருடன் நெருக்கமாக இருப்பது பிடிக்கும் – பிரபல நடிகையின் பதிலால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செவ்வாய், 9 ஜூலை 2019 (19:05 IST)
“ஒருவருடன்தான் வாழ வேண்டுமென பெண்களை வற்புறுத்த கூடாது” என பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியிறுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் மாஜி, அந்தாதன், பேட்மேன் படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் கபாலி, அழகுராஜா படங்களின் மூலம் பிரபலம் ஆனவர். இவர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக நடிகை நேஹா துபியா பேட்டி எடுத்தார். அப்போது “நடிக்கும்போது யார் மீதாவது உணர்ச்சிகள் எழுந்துள்ளதா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ராதிகா “நிச்சயமாக ஏற்பட்டிருக்கிறது. நடிப்பதால் மட்டுமல்ல எந்த துறையில் இருப்பவர்களாய் இருந்தாலும் ஒரு ஆண் மீது உணர்ச்சிகள் ஏற்படுவது பெண்களுக்கு இயல்புதான்” என பதில் கூறியுள்ளார்.

மேலும் “ஒரு ஆணுடன்தான் வாழ வேண்டும் என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். எனக்கு பல்வேறு சூழல்களில் பல்வேரு நபர்களுடன் நெருக்கமாக இருப்பது பிடிக்கும். எனவே ஒருவருடன்தான் வாழ வேண்டும் என ஒரு பெண்ணை கட்டாயப்படுத்த கூடாது” என கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் இதற்கு ராதிகா ஆப்தேவை திட்டி பதிவிட்டும் வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "நீ இப்படி இருப்பேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல" கடுப்பான லொஸ்லியா ஆர்மிஸ்!