Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"நீ அவளை தொடுவது எனக்கு சகிக்கல" - சேரன் மீது கடுப்பான பாத்திமா!

Advertiesment
Bigg boss 3
, செவ்வாய், 9 ஜூலை 2019 (15:32 IST)
பிக்பாஸ் 3 வது சீசனில் வீட்டிலிருக்கும் போட்டியாளருக்கும் , வெளியிலிருக்கும் மக்களுக்கும் மிகவும் பிடித்தமான கண்டெஸ்டெண்ட்டாக இருந்து வெளியேறிய பாத்திமா பாபுவுக்கு  வெளியில் வந்த பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



 
பிக்பாஸ் வீட்டில் செல்பவர்களின் யாரேனும் ஒரு சிலரே மக்கள் மனதில் இடம்பிடித்து நல்ல மனிதர் என்று பெயர் வாங்கி விமர்சனங்களில் இருந்து தப்பித்து விடுவார்கள். அந்தவகையில் தற்போது பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டின் அம்மாவாக பார்க்கப்பட்டவர். அவர் எலிமினேட்  ஆனது பலராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 
 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாத்திமா பாபுவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் சமீபத்தில் அவர் இணையதள சேனல் ஒன்றில் நேர்காணனில் பங்கேற்றபோது சேரன் மீது  சில திடுக்கிடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். 
 
அதாவது "சேரன் லாஸ்லியாவுடன் நடந்துகொளவதை பற்றி கூறிய அவர், "உங்க சொந்த பொண்ணாவே இருந்தாலும் லாஸ்லியாவை  ஃபிசிக்கலா இவ்ளோ தான் தொடணும்னு இருக்கு" ஆனால் அதையும் மீறி கன்னத்தை  பிடிச்சு அழுத்தி தேய்கிறது...  கிள்ளுறது...இதெல்லாம் எனக்கு பிடிக்கல. நீங்க அப்பாவாவே பண்ணாலும் எனக்கு அதெல்லாம் பார்க்கவே சகிக்கல’ என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

webdunia

 
மேலும் இதனால் தான் சேரனை நிறைய தடவை எச்சரித்ததாகவும் ஆனால் சேரன் தனது போக்கை மாற்றிக்கொள்ளவே இல்லை என்றும் ஃபாத்திமா பாபு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொலைகாரி வனிதா மீண்டும் கைது? - வீடியோ!