Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதே ஷ்யாம் படமும் ரிலிஸில் இருந்து பின் வாங்குகிறதா?

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:56 IST)
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் ராதே ஷ்யாம் திரைப்படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது.

பாகுபலி, சாஹோ உள்ளிட்ட பிரம்மாண்டமான படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் மற்றொரு பிரம்மாண்டமான படம் ராதே ஷ்யாம். 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் டீசர் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

இந்த படம் ஜனவரி மாதத்தில் வெளியாக இருந்தது. ஆனால் இப்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்படுவது மற்றும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் இந்த படமும் ரிலிஸில் இருந்து பின் வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆர் ஆர் ஆர் திரைப்படமும் இதெ காரணத்தின் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments