Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் கனடாவில் திரையரங்குகள் மூடல்: ‘வலிமை’க்கு பாதிப்பா?

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:42 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பல நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் கனடாவில் உள்ள ஒரு சில நகரங்களில் திரையரங்குகள் மூடப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வரும் 13ஆம் தேதி அஜித் நடித்த வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் கனடாவில் திரையரங்குகள் மூடப்படும் என்ற தகவல் அந்த படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இருப்பினும் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்றும் திரைப்படத்தின் ரிலீஸ் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் நார்வே நாட்டில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அந்நாட்டின் முக்கிய திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments