ராதே ஷ்யாம் படத்தின் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம் ஆகி இருந்தார்.
தமிழில் குறிப்பிடத்தகுந்த வகையில் ஹிட் பாடல்களைக் கொடுத்து கவனத்தை ஈர்த்தவர் ஜஸ்டின் பிரபாகரன். இருந்தபோதும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகும் ராதே ஷ்யாம் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்துக்காக அவர் இசையமைத்த பாடல்கள் அனைவருக்கும் பிடித்த நிலையில் பின்னணி இசை தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை போலும். இதனால் இப்போது பின்னணி இசைக்காக தமனை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது பின்னணி இசைக்கு தனி இசையமைப்பாளர்களை பணியமர்த்தும் போக்கு பாலிவுட் படங்களை போல தென்னிந்திய படங்களிலும் அதிகரித்து வருகிறது.