Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராயன் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல ஓடிடி!

Advertiesment
Raayan Movie 2024 Review

vinoth

, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:17 IST)
நடிகர் தனுஷ் நடித்து, இயக்கிய அவரின் 50 ஆவது படமான ராயன் ஜூலை 26 ஆம் தேதி வெளியான நிலையில் நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் கலக்கியது. தனுஷின் 50 ஆவது படம் என்ற பிராண்டாடோடு வெளியான இந்த படத்தை ரசிகர்கள் லாஜிக் எல்லாம் பார்க்காமல் கொண்டாடினர். படம் மிகப்பெரிய அளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 23 அம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமெடி நடிகர் தெனாலி மகனுக்கு,கல்வி கட்டணம் வழங்கி உதவி செய்தார் - நடிகர் விஜய் சேதுபதி!