கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சமீபகாலமாக அதிகளவில் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அதில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம், சிம்பு தேசிங் பெரியசாமி இயக்கும் திரைப்படம், விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என அடுத்தடுத்து இளம் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை வைத்து படம் தயாரித்து வருகிறது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆர் டி எக்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற ராஜ்கமல் பிலிம்ஸ் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.
 
									
										
			        							
								
																	ஷான் நிகம், ஆண்டனி வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்த இந்த படத்தை நஹால் ஹிதாயத் இயக்கியுள்ளார். சுமார் 8 ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 75 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து சாதனைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.