Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

Advertiesment
ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

vinoth

, வெள்ளி, 27 டிசம்பர் 2024 (14:34 IST)
நானும் ரௌடிதான் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான ஆர் ஜே பாலாஜி, அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் எல் கே ஜி படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது அவர் சித்தார்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சொர்க்கவாசல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படத்தின் கதைக்களம் 1999 ஆம் ஆண்டு சென்னை மத்தியச் சிறைச்சாலையில் நடந்த ஒரு கலவரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் திரைக்கதை பலர் மீது பயணம் செய்து ஒரு குழப்பமான ஒன்றாக இருந்ததால் திரையரங்கில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதனால் படம் பெரியளவில் வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் தற்போது படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. ஓடிடியிலாவது இந்த படம் கவனம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!