அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லிஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸானது.
சமீபத்தில் தாய்லாந்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு பாடல் காட்சியோடு நிறைவடைந்தது. இதையடுத்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் Sawadeeka இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியானது.
அனிருத் இசையில் அந்தோனி தாசன் குரலில் துள்ளலான பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலில் சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இருங் பாய் என்ற வார்த்தையை சில இடங்களில் சொருகியுள்ளார் அனிருத். இதைக் கேட்டு சிலர் ரசித்தாலும், சிலர் பாட்டு ஹிட்டாகணும்னு என்ன வேணாலும் செய்வதா குட்டவும் செய்து வருகின்றனர்.