Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏற்கனவே கடுப்பாக்கும் கமெண்ட்ரி… இதுல மூக்குத்தி அம்மனுக்கு ப்ரமோஷன் வேறயா?

Advertiesment
ஏற்கனவே கடுப்பாக்கும் கமெண்ட்ரி… இதுல மூக்குத்தி அம்மனுக்கு ப்ரமோஷன் வேறயா?
, புதன், 4 நவம்பர் 2020 (10:25 IST)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனை என்ற பெயரில் கொத்துக்கறி போடுவதாக ஆர்ஜே பாலாஜி மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வானொலியில் ஆர் ஜே வாக இருந்த ஆர் ஜே பாலாஜி தன் திறமையால் சினிமாவுக்குள் நுழைந்து இப்போது ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். இந்நிலையில் அவர் ஸ்டார் ஸ்போட்ஸ் தமிழில் கிரிக்கெட் வரண்னையும் செய்து வருகிறார். இப்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் அவரின் வர்ணனை மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் பற்றி எதுவுமே தெரியாமல் பரீட்சைக் கேள்விக்கு பதில் தெரியாத மாணவன் என்னவென்னமோ எல்லாம் உளறி தேர்வுத்தாளை நிரப்புவது போல வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவதாக ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழில் வர்ணனை செய்பவர்கள் எல்லாருமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது மேலும் ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸாக உள்ள அவரது மூக்குத்தி அம்மன் படத்துக்கு கமெண்ட்ரி செய்யும் போது சம்மந்தமே இலலாமல் ப்ரமோஷன் செய்து வருகிறார். இது ஏற்கனவே அவரின் கமெண்ட்ரியால் ரசிகர்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கள் கடவுள் தந்த பரிசு… சோனு சூட்டை புகழ்ந்து தள்ளிய விஷால்!