வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நானும் ரௌடிதான் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான ஆர் ஜே பாலாஜி, அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் எல் கே ஜி படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள கருப்பு படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் கதாநாயகனாக நடிக்கக் கதைகள் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ”கருப்பு படத்தின் ஷூட்டிங் முக்கால்வாசி முடிந்துவிட்டது. நல்ல ரிலீஸ் தேதிக்காகக் காத்திருக்கிறோம். ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார். அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது பற்றிக் கேட்டபோது “அந்த படத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. அந்த படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்