Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!

Advertiesment
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
, சனி, 11 ஆகஸ்ட் 2018 (16:15 IST)
நேற்று (ஆகஸ்ட் 10) வெளியான பியார் பிரேமா காதல் மிகப்பெரிய ஒபனிங்கை தந்திருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னாக மாற்றுபவர் என்ற பலராலும் பாராட்டப்படும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்திலும் தனது தங்க வேட்டையை தொடர்ந்திருக்கிறார்.



ஒரு திரைப்படத்தின் வெற்றியை  இரண்டு வகைகளாக பிரித்தெடுக்க முடியும். ஒன்று வியக்கத்தக்க பிரமாண்ட ஓபனிங் மற்றும் மற்றொன்று உணர்வுப்பூர்வமான ஒன்று. பியார் பிரேமா காதல் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் சொந்தமான ஒரு படம் என்று நான் நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் ஆன்மாவான இசை இந்த பெரிய ஓபனிங்கிற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தின் உலகளாவிய உரிமையை பெற்று இருக்கும் ரவீந்திரன்  படம் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றிருப்பதாக கூறுகிறார். படம் சம்பந்தப்பட்ட எதிர்பார்ப்புகள் ஆரம்ப கட்டத்திலிருந்து சரியான வேகத்திலேயே உள்ளன. வெளியீட்டுற்கு முன்னதாக படிப்படியாக முன்னேற்றம் அடைந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. யுவன் ஷங்கர் ராஜாவின் மயக்கும் இசை, கலர்ஃபுல் காட்சியமைப்புகள் மற்றும் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சனின் இளமை ததும்பும் கெமிஸ்ட்ரி ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

இயற்கையாகவே, கதை சொல்லும் யுக்தி மற்றும் சமகால தலைமுறையை பிரதிபலிக்கும் இளனின் கதை சொல்லல், ரசிகர்களை இந்த படத்தோடு தங்களை தொடர்புபடுத்தி கொள்ள வைத்தது. கூடுதலாக, ரசிகர்கள் மத்தியில் ஹரிஷ் கல்யாண், நல்ல திறமை உடைய நட்சத்திரமாக மாறுவதை பார்க்கும்போது மிகப்பெரிய சந்தோஷம். ஹரிஷ் கல்யாண் ஒரு நட்சத்திரமாக உருவாகியிருக்கிறார் என்பதை என் அனுபவத்தின் மூலம் நான் கூறுகிறேன். அவர் மிகப்பெரிய உயரங்களுக்கு போக வேண்டி இருக்கிறது. வரவிருக்கும் நாட்களில் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க இருக்கிறது" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவுக்கு ரூ.25 லட்சம் வெள்ள நிவாரணம் வழங்கிய சூர்யா, கார்த்தி