Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்பாகவே வரும் பியார் பிரேமா காதல்

Advertiesment
அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்பாகவே வரும் பியார் பிரேமா காதல்
, சனி, 4 ஆகஸ்ட் 2018 (15:06 IST)
காதல், ரசிகர்களுக்கு விருந்து வைக்க, அதன் முன்னறிவிக்கப்பட்ட நாளை விட முன்னதாகவே வருகிறது. இந்த காலகட்டத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான பியார் பிரேமா காதல், முன்பே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியே உலகமெங்கும் வெளியாகிறது.



யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையோடு அலங்கரிக்கப்பட்ட  அழகிய காட்சியமைப்புகள், ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. யுவன் ரசிகர்களின் தவிர்க்க முடியாத காத்திருப்புக்கு, தற்போது விடை தெரிந்திருக்கிறது.

பியார் பிரேமா காதல் படத்தின் உலக அளவிலான டிஸ்ட்ரிபியூஷன் உரிமையை பெற்றிருக்கும் இர்ஃபான் கூறும்போது, "ஆரம்பத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி தான் இந்த திரைப்படத்தை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர நாங்கள் விரும்பினோம். ஆனால் இசை மற்றும் டிரெய்லருக்கான நம்ப முடியாத வரவேற்பை கண்ட பிறகு, ரசிகர்களுக்கு முன்னதாகவே விருந்து வைக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். எனவே ஒரு நாள் முன்னதாகவே ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட செய்ய முடிவு செய்தோம். யுவன் ஷங்கர் ராஜாவின் 12 பாடல்கள்  இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மிகவும் அதிகமாக்கியது. கூடுதலாக, டிரெய்லருக்கும் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. பியார் பிரேமா காதல் ரசிகர்களுக்கு நிச்சயம் பொழுதுபோக்கு மற்றும் உண்மையான காதலின் தருணங்களை கொடுக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்றார்.

ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பதும், மனதை கவரும் அவர்களின் தோற்றமும் படத்துக்கு மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூஜையுடன் தொடங்கியது அதர்வாவின் குருதி ஆட்டம்