பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ஒதுங்கிக் கொண்டதால் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகின.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆர் ஆர் ஆர், ராதே ஷ்யாம் மற்றும் வலிமை ஆகிய மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆக இருந்தன. ஆனால் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததால் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியதை எல்லா படங்களும் ரிலீஸில் இருந்து பின் வாங்கின.
இதனால் சில சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகின. ஆனால் அவற்றின் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கக் கூடிய 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தமிழில் பொங்கலுக்கு ரிலீஸான எந்த படமும் வரவேற்பைப் பெறாத நிலையில் இப்போது டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தை மீண்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மீண்டும் திரையிட ஆரம்பித்துள்ளன.