பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.
தேவிஸ்ரீ பிரசாத் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார் என்பதும் தாடி நீவும் அழகை பாக்க கூடி நிக்கும் ஊரு என்று தொடங்கும் இந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி என ஆறு மொழிகளில் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் 6 மொழிகளிலும் பார்வையாளர்கள் குவிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் இந்த படத்தில் பகத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுகுமார் இயக்கி உள்ளார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.