Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு ஆக்‌ஷன் காட்சிக்கு 35 நாட்கள் ஷூட்டிங்… 1000 கோடி பிஸ்னஸுக்கு பிளான் போடும் புஷ்பா 2!

Advertiesment
ஒரு ஆக்‌ஷன் காட்சிக்கு 35 நாட்கள் ஷூட்டிங்… 1000 கோடி பிஸ்னஸுக்கு பிளான் போடும் புஷ்பா 2!
, வெள்ளி, 12 மே 2023 (08:05 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இரண்டாம் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து தற்போது இரண்டாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அல்லு அர்ஜுன் போல சேலை அணிந்து மேக்கப் எல்லாம் போட்டு முரட்டு உருவமாக காணப்பட்டார். இந்நிலையில் இப்போது அடுத்த கட்ட ஷூட்டிங் இலங்கை மற்றும் மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் நடக்க உள்ளதாம்.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்காக ஒரு ஆக்‌ஷன் ஸ்டண்ட் காட்சியை 35 நாட்கள் ஷூட் செய்துள்ளாராம் இயக்குனர் சுகுமார். இந்த படத்தை சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு பிஸ்னஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தை 250 நாட்கள் ஷூட் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. படம் 2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு தொடகத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஜீவா?... ஓ இதுதான் காரணமா?