Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் சிக்கிய சிறுவனின் உடல்நிலைக் கவலைக்கிடம்..!

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (09:54 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட தியேட்டர் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என காவல்துறை எச்சரித்தும் அல்லு அர்ஜுன் வந்ததாக காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் காயங்களோடு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஸ்ரீதேஜின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலரின் பொறுப்பற்ற தனத்தால் ஒரு உயிர் பறிபோனதும் இல்லாமல் சிறுவனின் கவலைக்கிடமான நிலையும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபாஸுக்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி?.. எந்த படத்தில் தெரியுமா?

நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது ஆண் குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

சலார் 2 என்ன ஆச்சு?... நடிகர் பிரித்விராஜ் கொடுத்த அப்டேட்!

மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சுந்தர் சி மோதலா?.. நின்ற படப்பிடிப்பு!

கார்த்தி 29 படத்தின் கதாநாயகி இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments