Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு 70 சதவீதம் உயர்ந்த புஷ்பா 2 வசூல்?

அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு 70 சதவீதம் உயர்ந்த புஷ்பா 2 வசூல்?

vinoth

, செவ்வாய், 17 டிசம்பர் 2024 (15:28 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட தியேட்டர் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டு ஒரே நாளில் இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அல்லு அர்ஜுனின் கைது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் கைதால் புஷ்பா 2 வசூல் 70 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. தற்போது வரை புஷ்பா 2 படத்தின் வசூல் 1409 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'விடுதலை 2’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட்: ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?