அஜித் துணிவு படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஒன்றரை வருடம் உலக சுற்றுலா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து அவரை இயக்க சுதா கொங்கரா உள்ளிட்ட இயக்குனர்கள் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த லிஸ்ட்டில் இப்போது விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி ஆகியோரும் இணைந்துள்ளார்களாம்.