Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா!

vinoth
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (15:15 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத். அவரின் பல ஹிட் படங்கள் தமிழிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. எம் குமரன் படமெல்லாம் அவர் இயக்கிய படத்தின் ரீமேக்தான். ஆனால் தற்போது அவர் ஒரு பின்னடைவில் உள்ளார்.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவான லைகா திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக வந்தது. ஆனால் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக அவரின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவானது. இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை ஜூனில் அவர் தொடங்கவுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி த்ரிஷா ஜோடி 96 படத்தின் முதல் பாகத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் தற்போது உருவாகவுள்ள இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இதையடுத்து மூன்றாவது முறையாக பூரி ஜெகன்னாத் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'எதிர்நீச்சல் 2' தொடரிலிருந்து நடிகை கனிகா விலகியது ஏன்? வெளியான உண்மை காரணம்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

ட்ரண்ட்டிங் மோனிகா காஸ்ட்யூமில் கலக்கும் எஸ்தர் அனில்!

தமிழ்ப் படங்கள் ஏன் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை… இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில்!

ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments