விவேகம் டீசர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இவ்வளவா?
, வியாழன், 11 மே 2017 (10:14 IST)
சிறுத்தை சிவா, தல அஜித் கூட்டணியில் மூன்றாவது திரைப்படமான ” விவேகம்” படத்தின் டீசர், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தெறிக்க வைக்கும் வகையில் விவேகம் டீசர் அமைந்திருந்ததால், அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
விவேகம் டீசர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலே பல லட்சம் பேர் விவேகம் டீசரை யு டியூப் வலைத்தளத்தில் பார்வையிட்டனர். மேலும் பலர் தங்களுடைய பேஸ்புக் பக்கங்களிலும், வாட்ஸ் ஆப் மூலமும் விவேகம் டீசரை பகிர்ந்து கொண்டனர்.
தற்போதைய நிலவரப்படி, வெளியிடப்பட்ட 9 மணி நேரத்தில் விவேகம் டீசரை சுமார் 18 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்