Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்; இம்மாத இறுதியில் வெளியாகும் நயன்தாரா படம்!

Advertiesment
தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்; இம்மாத இறுதியில் வெளியாகும் நயன்தாரா படம்!
, புதன், 28 மார்ச் 2018 (12:37 IST)
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் காலவரையற்ற நிலையில் ஸ்டிரைக் நடத்தி வரும் நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஒன்று  வெளியாக உள்ளது.
திரைப்பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர தடை விதித்து உள்ளனர். இதனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி தெலுங்கு, மலையாள மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு பணம் பார்க்கும்  முயற்சிகள் நடக்கின்றன.
 
இந்நிலையில் மலையாள மெகா ஸ்டார் ஸ்டார் மம்முட்டி, நயன்தாரா ஜோடியாக நடித்து கேரளாவில் வசூலை குவித்த ‘புதிய நியமம்’ என்ற மலையாள  படத்தை தமிழில் ‘வாசுகி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளனர். இந்த படத்தை இம்மாத இறுதியில் திரைக்கு கொண்டு வருகின்றனர். 
webdunia
பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும் அயோக்கியர்களுக்கு பாரபட்சமின்றி மரணத்தை பரிசளிக்க வேண்டும் என்பது தான் "புதிய நியமத்தின்" கதைக் கரு. இப்படத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த மூவரை நயன்தாரா எவ்வாறு கொலை செய்கிறார் என்பதை மிகவும் திரில்லாக சொல்லப்பட்டுள்ளது இப்படத்தினை சாஜன் என்பவர் டைரக்டு செய்திருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா-விஜய்சேதுபதி தயாரிப்பாளர்கள் மோதல்