Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பாளரை 6 லட்சம் ஏமாற்றினாரா அஜித்? இணையத்தில் வைரலான வீடியோ!

Advertiesment
தயாரிப்பாளரை 6 லட்சம் ஏமாற்றினாரா அஜித்? இணையத்தில் வைரலான வீடியோ!
, வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (18:16 IST)
பிரபல தயாரிப்பாளரான செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தன்னிடம் அஜித் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.

திரையுலகில் நடிகர் அஜித் மிஸ்டர் க்ளீன் என்ற பெயருடன் வலம் வருபவர். வருமான வரி முதல் எல்லாவற்றையும் சட்டப்படி செய்து சம்பளத்தை வெள்ளையாகவே வாங்குபவர் என்று அனைவராலும் பாரட்டப்படுபவர். ஆனால் இப்போது பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தன்னிடம் 1996 ஆம் ஆண்டு அஜித் 6 லட்சம் பணம் வாங்கி அதை தரவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘1996 ஆம் ஆண்டு அஜித் என்னிடம் அவரின் பெற்றோர் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று 6 லட்சம் வாங்கினார். அதற்காக எந்த கையெழுத்தும் வாங்காமல் நம்பிக்கையோடு நான் கொடுத்தேன். அதற்கு பதிலாக எனக்கு ஒரு படம் பண்ணித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்றுவரை படம் பண்ணித்தரவில்லை. நான் தொலைபேசி செய்தாலும் எடுப்பதில்லை. 1996 ஆம் ஆண்டு 6 லட்சம் என்றால் இன்று அதன் மதிப்பு என்ன?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திக்காக கதை தயார் செய்யும் இயக்குனர்… பாதையை மாற்றி புதிய திட்டம்!