Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர் வெற்றியின் சொந்தக்காரர்- தயாரிப்பாளர் வாழ்த்து

தொடர் வெற்றியின் சொந்தக்காரர்- தயாரிப்பாளர் வாழ்த்து
, சனி, 4 செப்டம்பர் 2021 (18:03 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இயக்குநர் வெற்றிமாறனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குனரான வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ் பெற்றார்.

இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்தது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது.

மேலும் வடசென்னை , அசுரன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அதேபோல் நடிகர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  
webdunia

இந்நிலையில் இன்று தனது 46வது பிறந்தநாள் கொண்டாடும் வெற்றி மாறனுக்கு ரசிகர்கள், திரைத்துறை நண்பர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளார் எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில், தொடர் வெற்றியின் சொந்தக்காரர், இயக்குனர் @VetriMaaran அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! #HappyBirthdayVetrimaaran என்று தெரிவித்துள்ளார்.  
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் & திராவிடம் என்றால் என்ன? மோதல்களுக்கு வைரமுத்து விளக்கம்!