10 நொடியில் உயிர் பிழைத்த காஜல் அகர்வால் - இந்தியன் 2 விபத்து குறித்து கவலை!

வியாழன், 20 பிப்ரவரி 2020 (12:03 IST)
ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டில் இந்தியன் 2படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணிகளை ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென  கிரேன் அறுந்து விழுந்தது. 
 
இதில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் காயம்  படுகாயம் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்றிரவு என் சகாக்களின் எதிர்பாராத, அகால இழப்பில் நான் உணரும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது உங்கள் மூவரின் குடும்பங்களுக்கு அன்பு, வலிமை மற்றும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் . இந்த பாழடைந்த தருணத்தில் கடவுள் எனக்கு பலம் தருகிறார். நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்து இவ்வளவு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உயிரோடு இருந்து இந்த ட்வீட்டைப் பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே தேவைப்பட்டது. நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து அந்த நொடியில் கற்றுக்கொண்டேன்"  என மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் செட்டில் இருந்த ஷங்கர், காலில் விழுந்த க்ரேன்... உண்மை நிலவரம் என்ன??