செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது.
அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். சிங்கிள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவரும் பிரியா பவானி கொஞ்சம் கேப் கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகிவிடுவார்.
அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை சட்டையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் " பிரியா.... கடையில போய் நிக்காதீங்க குழந்தைங்க பார்பி Doll'னு சொல்லி அடம் பிடிச்சுருவாங்க" என கமெண்ட் செய்துள்ளார்.