பிரபல இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான படம் “வெந்து தணிந்தது காடு. அந்த படத்துக்குப் பிறகு நீண்ட ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தின் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் கௌதம் மேனன். இதற்கிடையில் நடிப்பில் கவனம் செலுத்தும் அவர் அதிகளவில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் முக்கிய வேடத்தில் சிம்புவின் பத்து தல படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கௌதம் மேனன் பற்றி பேசிய நடிகை பிரியா பவானி சங்கர் “ கௌதம் மேனன் சார் நடிக்கும் படங்களை பார்க்கும் போது அவர் படங்கள் இயக்குவதையே நிறுத்திட்டாரோ என தோன்றுகிறது. நம்ம தலைமுறைக்கே காதலிக்க கற்றுக்கொடுத்தவர் அவர்” எனக் கூறி அவரைப் புகழ்ந்துள்ளார்.
கௌதம் மேனன் அடுத்து பாலிவுட்டில் விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.