கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என நடிகை பிரியா பவானி சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மரணமடைந்ததையடுத்து ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த கலவரத்தில் பள்ளிக்கூடச் சொத்துகள்சூறையாடப்பட்டிருக்கின்றன. காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிது.இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்கள் கலவரக்காட்சிகள் வீடியோக்களாக வெளியாகி அதிகளவில் பரவின.
இதையடுத்து மாணவிக்கு நீதிக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ட்விட்டரில் #justiceforsrimathi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரண்ட் ஆனது. இந்நிலையில் திரையுலக பிரபலமான பிரியா பவானி சங்கர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இந்த ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார்.
பொதுவாக தமிழ் சினிமா பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் இதுபோன்ற சென்ஸிட்டிவ்வான விஷயங்களில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் அதையும் மீறி பிரியா பவானி சங்கர் பாதிக்கப்பட்ட மாணவிக்காக குரல் கொடுத்தது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.