Publish Date: Mon, 18 Jul 2022 (13:19 IST)
Updated Date: Mon, 18 Jul 2022 (13:21 IST)
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் காரணமாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின
இந்தநிலையில் கனியாமூர் தனியார் பள்ளியின் மாணவி மர்ம மரணம் தொடர்பாக வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது
Mahendran
Publish Date: Mon, 18 Jul 2022 (13:19 IST)
Updated Date: Mon, 18 Jul 2022 (13:21 IST)