நடிகை பிரியா பவானி சங்கர் தனது பழைய புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் பிரியா, தன்னுடைய பள்ளிக்கால புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.