எனக்காக என் லவ்வர் உயிரையே குடுப்பார்! பிரியா பவானி சங்கர் பெருமிதம்!

ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (12:24 IST)
தனது காதலன் தனக்காக உயிரையே கொடுப்பார் என நடிகை ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

செய்தி தொகுப்பாளராக, சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது தமிழின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் மான்ஸ்டர், மாஃபியா படங்களை தொடர்ந்து கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது காதலன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பிரியா பவானி சங்கர். அதில் “எனக்கு பெரிய நடிகை என்ற பின்புலம் இல்லாதபோதே அவரை நன்றாக தெரியும். எனது அப்பாவிற்கு பிறகு என்னை மிகவும் அன்போடு கவனித்து கொள்பவர் அவர். சொல்லப்போனால் எனக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு என் மீது அவர் அன்பு வைத்திருக்கிறார்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இன்னைக்கு செகண்ட் சிங்கிள் அப்டேட் நண்பா! – விஜய் ரசிகர்கள் உற்சாகம்!