Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

vinoth
வியாழன், 4 ஜூலை 2024 (12:31 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை

இந்த படம் இண்டியானா ஜோன்ஸ் போல ஒரு சாகசப் படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படமாக்கப்பட உள்ளதாகவும், ஏராளமான விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளிநாட்டில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக இந்தோனேஷியாவை சேர்ந்த நடிகை செல்சீ இஸ்லன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகரான பிரித்விராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே பிரபாஸின் சலார் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கவர்ந்திழுக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர் அனில்!

வைரலான ‘கண்ணாடிப் பூவே’ பாடல்.. ரெட்ரோ செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments