Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

Captain miller
vinoth
வியாழன், 4 ஜூலை 2024 (12:23 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் சிறப்பாக அமைந்தது. ஆனால் படத்தின் மீதான கலவையான விமர்சனம் காரணமாக வசூல் பாதிப்படைந்தது. மொத்தத்தில் இந்த படம் தயாரிப்பாளருக்கு லாபம் பெற்றுத் தரவில்லை என சொல்லப்பட்டது. அதன் பின்னர் ஓடிடியில் வெளியான போதும் பெரிதாக சலனத்தை உருவாக்கவில்லை.

இந்நிலையில் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படம் இங்கிலாந்து நாட்டு தேசிய விருதுகள் நிகழ்வில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் விருதினைப் பெற்றுள்ளது. இதை படத்தின் வசனகர்த்தாவான மதன் கார்க்கி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபாஸுக்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி?.. எந்த படத்தில் தெரியுமா?

நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது ஆண் குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

சலார் 2 என்ன ஆச்சு?... நடிகர் பிரித்விராஜ் கொடுத்த அப்டேட்!

மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சுந்தர் சி மோதலா?.. நின்ற படப்பிடிப்பு!

கார்த்தி 29 படத்தின் கதாநாயகி இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments